Perambalur: On the death anniversary of Thanthai Periyar, DMK members paid their respects by garlanding his statue!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க.சார்பில், தந்தை பெரியாரின் 52 -வது நினைவு தினத்தை முன்னிட்டு, பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்கழு துணைச்செயலாளர் பா.துரைசாமி, தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேநதிரன், மாவட்ட துணைச்செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், ஒன்றிய கழகச் செயலாளர் எம்.இராஜ்குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, கலையரசன், ரா.சிவா, ராமலிங்கம், சாம்ராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!