Perambalur: On the occasion of Krishna Jayanti, climbing the bald tree at Madanagopala Swamy Temple, Uriadi festival!
பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீமதனகோபால சுவாமி திருக்கோவிலில் கோகுலாஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து உறியடி விழா நடந்தது. பின்னர், பெருமாள் பூதேவி சமேத ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி நாலு கால் மண்டபம் உறி, பெரிய தெற்கு தெரு உறி, சின்னதெற்கு தெருஉறி,பழைய நகராட்சி அருகே உள்ள உறி இறுதியாக தேரடி அருகில் உறியடி விழாவை முடித்து பெருமாள் நான்கு மாட வீதிகளிலும் உலா வந்து சேவை சாதித்தார். பக்தர்கள் கோவிந்தா முழக்கங்களுடன் பின் தொடர்ந்தனர். கோயில், செயல் அலுவலர் கோவிந்தராஜன், முன்னாள் அறங்காவலர் தெ.பெ. வைத்தீஸ்வரன், திருகோவில் பணியாளர்கள் உள்ளிட்ட திரளான பெரம்பலூர் நகரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.