Perambalur: Only men participated; A unique ritual of slaughtering goats to pray for rain!

பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் மழை வேண்டி செங்கமலையார் கோயிலில் கிடா வெட்டி ஆண்கள் மட்டுமே பங்கேற்ற நூதன வழிபாடு நடந்தது. இந்த கிராமத்தில் உள்ள செங்கமலையார் சாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்று தொடர்ந்து மழை பெய்ய வேண்டி கிடாவெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதே போல், இந்த ஆண்டும் நாட்டார்மங்கலத்தில் உள்ள வடக்கி மலை அடிவார வனப்பகுதியில் உள்ள செங்கமலையார் சுவாமி கோயிலுக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்தும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு செய்தனர். இதில் பங்கேற்ற ஆண்கள் அனைவருக்கும் கிடா விருந்துடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டார்மங்கலம் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள் பலர் செய்திருந்தனர். செங்கமலையார் சுவாமிக்கு ஆண்கள் மட்டுமே நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று மழை வேண்டி வழிபாடு நடத்தி வந்தது அருகில் உள்ள கிராமங்களில் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!