Perambalur : Operational and capital loans to micro-enterprises under Artist Loan Assistance Scheme; Collector Information!

தமிழ்நாடு அரசின் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி (தாய்கோ வங்கி) கிளைகளில் குறு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு மிக குறைந்த வட்டியில் 7 சதவீத வட்டியில் ரூபாய் 20.00 லட்சம் வரை நடைமுறை மற்றும் மூலதன கடன்கள் வழங்கும் புதிய திட்டமான கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள குறு தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு அசையா சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் குறைந்த பட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 65க்கு மிகாமல் இருக்க வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள். தொழில் முனைவோர்களுக்கு சிபில் மதிப்பீடு 600 புள்ளிகளுக்கு குறையாமல் மற்றும் 2 ஆண்டுகளாக ஏற்கனவே லாபத்தில் இயங்கும் நிறுவனங்கள். பிற நிறுவனங்களில் அதிக வட்டிக்கு பெற்ற கடன்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு மாற்றி கொள்ளலாம்.

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் மற்றும் குறு தொழில் உற்பத்தி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பணன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் எளம்பலூர் சாலை தாய்கோ வங்கி, கிளைமேலளாரை முகவரியிலோ அல்லது 93441 59168 & 04328 – 275633 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு கலைஞர் கடன் உதவி திட்டத்தில் பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!