Perambalur: “Oraniel Tamil Nadu”; Minister Nehru presented 539 new cell phones purchased by Minister Sivashankar to BLA2 BDA!

 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்,குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில், “ஓரணியில் தமிழ்நாடு” நோக்கத்தில், பாக நிலை முகவர்கள், பாக நிலை டிஜிட்டல் முகவர்கள், (BLA2,BDA), மற்றும் கிளைச் செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம், ஜே.கே.திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில்
நடைபெற்றது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் – மண்டல பொறுப்பாளருமான கே.என்.நேரு, போக்குவரத்துத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு, 2026-ஆம் ஆண்டு தி.மு.க.தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றி, தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும் என்று பேசினர்.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாக நிலை முகவர்கள் (BDA) 332 பேருக்கும்,குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பாக நிலை முகவர்கள் (BDA)207 பேர் என மொத்தம் 539 பேருக்கும் (செந்துறை நீங்கலாக) டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்க்காக, அமைச்சர் சா.சி.சிவசங்கர் தனது சொந்த செலவில் வாங்கித் தந்த 539 செல்போன்களை கே.என்.நேரு பாக நிலை முகவர்களிடம் வழங்கினார்.

இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், குன்னம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் ஏ.கே.அருண், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, பட்டுச் செல்வி ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஆதவன், துணை அமைப்பாளர்கள் அப்துல்கரீம், டி.ஆர்.சிவசங்கர், ஆர்.அருண்,வ.சுப்ரமணியன், மா.பிரபாகரன், பேரூர் செயலளர்கள் குரும்பலூர் எம்.வெங்கடேசன், லெப்பைக்குடிக்காடு ஏ.எஸ்.ஜாகிர்உசேன், அரும்பாவூர் ஆர்.ரவிச்சந்திரன், பூலாம்பாடி செல்வலெட்சுமி சேகர்,

மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் தங்க.கமல், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் அப்துல்பாரூக், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆர். குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ.எம்.கே.கரிகாலன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் ரா.சிவா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொன்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!