Perambalur: Peace Rally ahead of Karunanidhi Memorial Day; DMK district in-charge V. Jagadesan report!
பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைவர் கலைஞர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, எனது தலைமையில், எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலையில்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.
நாளை 07.08.2024-புதன்கிழமை, காலை 10.00 மணியளவில் ,கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அமைதிப் பேரணி சென்று, அங்குள்ள கலைஞர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
முன்னதாக பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக் கழக செயலாளர்கள், வார்டு கழகச் செயலாளர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.