Perambalur: People with disabilities are protesting their demands!
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு இன்று காலை, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதில், உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனே வழங்க வேண்டும், 100 நாள் வேலை சட்ட விதிகளின் படி உடனே வேலை வழங்க வேண்டும், மாதம் 35 கிலோ அரிசிக்கு AAY கார்டுகளுக்கு சட்டப்படி வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் கொடுக்கும் புகார் மீது காவல் நிலையங்கள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவும், மாற்றுத் திறனாளிகளுக்கு சிப்காட் தொழிற்சாலையில் 4% வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து கலைந்து சென்றனர்.