Perambalur: Periyar’s 146th birthday; Dr. Vallaban led by DMK members garlanded the statue and honored it!
பகுத்தறிவு பகலவன் தந்தைபெரியார் அவர்களின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட அவைத்தலைவர் அ.நடராசன், மாவட்ட மீனவரணி துணைத் தலைவர் கோபாலபுரம் ம. செல்வராசு, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் அ.கண்ணபிரான், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ராஜ்குமார்,மாவட்ட பிரதிநிதி அ. சந்திரமோகன், ஆ.தனசேகர் மற்றும் நாரணமங்கலம் குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.