Perambalur: Permits for transporting gravel, M-Sand, P-Sand can be obtained online; Collector’s information!

குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக, இணையவழியில் (Bulk-Permit) வழங்கும் நடைமுறை செப்டம்பர் 2024 முதலும் மற்றும் (e-Permit) வழங்கும் நடைமுறை பிப்ரவரி 2025 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில், ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட அனைத்து வகை கனிமங்களையும் கனிம சேமிப்பு கிடங்கிலிருந்து எடுத்துச் செல்வதற்கு www.mimas.in.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து உரிய நடைச்சீட்டுடன் (Transit pass) எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்த நடைமுறை 12.06.2025 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கனிம குத்தகைதாரர்கள் மற்றும் கனிம சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் அனைவரும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து மாற்று நடைச்சீட்டுடன் பெற்று ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை சேமிப்பு கிடங்களிலிருந்து எடுத்துச் சென்று பயன்படுத்துமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திகுறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!
Enable Notifications OK No thanks