Perambalur: Petition to the Collector protesting the construction of the Arumbavoor municipality building on the temple land!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் அரசுக்கு சொந்தமான தர்மராஜ கோவில் உள்ளது. அதன் அருகில், அரசுக்கு சொந்தமான இடத்தில், வேளாண் உழர்களம், பேரூராட்சி நீர்தேக்க தொட்டி,மழைமணி, சமூதாயக்கூடம் ஆகியவை உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகவும், கோவில் திருவிழா காலங்களிலும் தீ மிதிக்கும் இடமாக பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அந்த இடத்தில், அரும்பாவூர் பேரூராட்சிக்கு கட்டிடம் கட்டட தேர்வு செய்துள்ளதாக அறிகிறோம். இதனால், கோயிலுக்கு பக்தர்களுக்கு தற்காலத்திலும், வருங்காலத்திலும் இடையூறு ஏற்படும் என்பதால், அந்த கட்டிடத்தை வேறு பகுதியில் மாற்றி கட்ட வேண்டும் என கலெக்டர் அலுவலக குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த மக்கள் முன்னாள் பேரூராட்சி தலைவர் சோலை.ராமசாமி உடன் வந்து மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி முடிவெடுப்பதாக தெரிவித்தனர்.