Perambalur: Phoolampadi Draupadi Amman Temple Dimithi Festival is happening tomorrow; Thousands of people including International Businessman DATO S PRAKADEESH KUMAR are participating.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் ஆலய தீ மிதி திருவிழா மற்றும் ஊரணி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் நேற்று ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ அர்ஜுனன் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இன்று நாட்டுக்கல் மனக்காட்டிலிருந்து திரளான பக்தர்கள் பால் குடம் மற்றும் அக்னி சட்டி எடுதும் அலகுகுத்தியும் ஊர்வலமாக வந்தனர்.ஆலயம் வந்ததும் ஸ்ரீதிரௌபதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதில் பன்னாட்டு தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் உட்பட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாகநல்ல தண்ணீர் குளத்திலிருந்து அருளோடு புறப்பட்டுவந்து தீ மிதித்தல் நிகழ்வும் நாளையும் 15ம் தேதி ஊரணி பொங்கல் விழாவும் நடைபெற உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.இதற்கான ஏற்பாடுகளைகிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.