Perambalur: picketing with empty jugs for drinking water!
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ஊராட்சியில் கடந்த 4 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று காலை திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை – எளம்பலூர் சாலை பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில், பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.