Perambalur: Platform for Kolathur Muneeswaran Temple at Rs 1.50 lakh; DMK executive TR Sivasankar built it with his own funds!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளத்தூர் கிராமம் தெற்கு தெருவில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. கொளத்தூரை சேர்ந்தவரும், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான டி.ஆர். சிவசங்கர் தனது சொந்த பணத்தில் இருந்து சுமார் ரூ 1.50 லட்ச மதிப்பில் மேடை கட்டி கொடுத்தார். இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
ஆலத்தூர் ஒன்றிய திமுக செயலாளரும், யூனியன் சேர்மனுமான என்.கிருஷ்ணமூர்த்தி கல்வெட்டை திறந்து வைத்து, கோயிலுக்கு அர்பணித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் டி.ஆர்.சிவசங்கர், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சுந்தர்ராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், கிளைச் செயலாளர்கள் துரை மாணிக்கம், பன்னீர்செல்வம், ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக கிளை பொறுப்பாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.