Perambalur police are investigating the robbery of a lakh worth of goods, including a scooter, in a locked house.
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் ரோஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி மகேஷ்வரி(55). உதயசங்கர் என்ற மகன் உள்ளார். இவர் தெற்கு ஆப்பிக்காவில், கேட்டரிங் வேலை செய்து வருகிறார். மகேஸ்வரி திருச்சி மாவட்டம், எதுமலை அருகே உள்ள வலையூரில் உள்ள தனது மகள் உமாராணி வீட்டிற்கு கடந்த 18ந்தேதி சென்று விட்டு இன்று காலை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோக்கள், அலமாரிகளின் கதவு உடைக்ப்பட்டு திறந்து கிடந்தது . அதில் இருந்த ஒரு பவுன் நகை மற்றும் ரூ. 85 ஆயிரம் மதிப்புள்ளள ஸ்கூட்டரும் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மோப்பநாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவரமாக ஈடுபட்டுள்ளனர்.