Perambalur: Police arrest 3 people, including a refugee, for selling ganja!
பெரம்பலூரில் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனை செய்த 3 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சப் - இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்ட போது தனலட்சுமி சீனிவாசன் காலேஜ் பஸ் ஸ்டாப் அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த புதிய அகதிகள் முகாமை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரபு (19), கவுள்பாளையம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த தனசேகரன் விஷ்ணு(18), பெரம்பலூர் ராம் தியேட்டர் அருகே உள்ள கம்பன் தெருவை சேர்ந்த பழனிசாமி மகன் பிரவீன் (19)ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் Cr.No.941/24 U/S 20(b) (ii) (A) 77 JJ NDDS Act யின் படி வழக்குப்பதிவு செய்ததுடன், வர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கஞ்சா, குட்கா மற்றும் கள்ளச்சாராயம் போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றிய தகவலை அருகில் உள்ள காவல்நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலகத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.