Perambalur: Police fined bikes for violating rules at bus stand; Foreclosure Alert!
பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டிற்கு, சென்னை திருச்சி, தஞ்சை, கடலூர், நாமக்கல், கோவை, கோத்தகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், பழனி, சேலம் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பதி, வேலூர், துறையூர், ஆத்தூர், அரியலூர் , கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், புதுச்சேரி என பல்வேறு ஊர்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் இரவு பகலாக வந்து செல்கின்றன.
பள்ளி, கல்லூரி, மருத்துவம், வியாபாரம் தொடர்பாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வந்து செல்லுகின்றனர். இங்கு வரும் பயணிகள் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு இடையூறாக வெளியூர் செல்பவர்கள், வாகனத்தை பெரம்பலூர் புதிய பஸ் ஸ்டாண்டிலேயே போட்டுவிட்டு செல்வதால் நாள் கணக்கில் அங்கேயே பைக்கில் நிற்கின்றன. இதனால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க கோரி பொதுமக்களிடம் பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் கேட்காததால் இன்று காலை ட்ராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் பேருந்து நிலையத்தில் சென்ற போலீசார் பொதுமக்களுக்கு இடையிலாக இருக்கும் தள்ளுவண்டி கடைகள், ஆக்கிரப்புகளை அகற்றிக் கொள்ள கோரியும், மேலும் வாகனங்கள் வந்து செல்லும் வகையில் எவ்வித இடையூறும் ஏற்படுத்த கூடாது என்றும், பயணிகள் எளிதாக வந்து செல்ல வேண்டும் என்றும் அங்குள்ளவர்களுக்கு அறிவுறுத்தினர்.
அங்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த வாகன ஓட்டிகளுக்கு வண்டிகளை எடுக்க உத்தரவுகளை பெரிய பிறப்பித்தனர். எடுக்காத வண்டிகளை கண்டுபிடித்து அந்த வண்டிகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும், வண்டிகள் தொடர்ந்து நிறுத்தினால் வண்டிகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தனர். பயணிகளுக்கு , பேருந்துகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பைக்குகளை நிறுத்தி விட்டு செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்களை கேட்டுக்கொள்வதோடு மீறினால் தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.