பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பெரம்பலூர் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் வட்டம், பாப்பாங்கரை கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான சதீஸ்குமார் என்பவர் கடந்த 23.10.2013 அன்று ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தின் மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
சதீஸ்குமார் பெற்றோர்கள் செல்லப்பிள்ளை, சரோஜா ஆகியோர் இழப்பீடு வழங்க கோரி பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்கு புலன் விசாரணை அதிகாரியான பெரம்பலூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார், நீதிமன்றத்தில் 05.01.2017 அன்று ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.நஸீமா பானு, காவல் ஆய்வாளரை 12.01.2017 அன்று நேரில் ஆஜராக வாரண்ட் பிறப்பித்துள்ளார்.