Perambalur: Police raided the houses of criminals and rowdies!
பெரம்பலூர் மாவட்டத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்கள் விற்பனை ஆகிவற்றை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும்,
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றம் நடக்காமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கமான குற்றவாளிகள், ரவுடிகள், சந்தேக நபர்கள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று இன்று வழக்கமாக நடக்கும் சோதனையில் ஈடுபட்டனர். .
மேலும், மேற்படி குற்றப்பின்னனி உடைய நபர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்தும், அவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் ஏதேனும் உள்ளவாறு நடந்து கொண்டுள்ளார்களா என்பதையும் தீவிரமாக விசாரணை செய்தனர்.