Perambalur: Police S.P. has praised and rewarded the policemen who have worked well in cases.
பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு ஆதர்ஷ் பசேரா, பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த தனிப் படையினருக்கு பாராட்டி வெகுமதிகளை வழங்கினார்.
மருவத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யலூர் கிராமத்தில், வள்ளி என்பவர் சொத்துக்காக தனது தாயார் மற்றும் தங்கை என இருவரையும் கொலை செய்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து காவல் ஆய்வாளருக்கு புலனாய்வில் உதவியாக இருந்து வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற உதவியாக இருந்த போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் கண்ணுசாமி மற்றும் நீதிமன்ற தலைமைக் காவலர்கள் ஆனந்த்,கீதா ஆகியோருக்கும்,
பெரம்பலூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரு சக்கர வாகன திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகள் சதீஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவரிடமிருந்து 20 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து சிறப்பாக செயல்பட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர் அலெக்சாண்டர், தலைமைக் காவலர்கள் பாலமுருகன், முனீஸ் ராஜா, கார்த்திகேயன் ஆகியோருக்கும்,
3 வருட காலமாக தலைமறைவாக இருந்த எதிரி ஆனந்த் @ முருகானந்தம் என்பவரை கைது செய்து நிலுவையில் இருந்த நீதிமன்ற பிடியானையை நிறைவேற்றிய தனிப்படை உதவி ஆய்வாளர் பார்த்திபன், சிறப்பு உதவி ஆய்வாளர், பழனிவேல் மற்றும் தலைமைக் காவலர்கள் தயாளன், பாலமுருகன் ஆகியோருக்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த அனைத்து காவல்துறையினரையும் பாராட்டி வெகுமதி வழங்கினார்.