Perambalur polling machine depository in the presence of political parties collector inspection!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையினை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் திறந்து, காப்பறைகளை ஆய்வு செய்திட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை கலெக்டர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் பிரிக்கப்பட்டு, பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, சட்டமன்ற தொகுதிவாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார். பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மீண்டும் பாதுகாப்பறை பூட்டி சீலிடப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.