Perambalur: Pradosha Puja at Brahmapureeswarar Temple!
பெரம்பலூர் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று மாலை பிரதோஷ பூஜை பால், தயிர், சந்தனம்,மற்றும் பழ வகைகளுடன் ஈசன் மற்றும் அதிகார நந்திக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது ஈசன் ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரம் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். செயல் அலுவலர் கோவிந்தராஜன் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன், சிவனடியார்கள் திரளாக கலந்து கொண்டு ஈசன் அருள் பெற்றனர் பூஜைகளை கவுரி சங்க சிவாச்சாரியார், பிரசாந்த் சிவாச்சாரியார் செய்தனர்.