Perambalur: Preparatory training for Indian civil service for fishing community youth; Collector Information!
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் (அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான பயிற்சி நிலையம்) இணைந்து ஆண்டுதோறும் 20 கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணிக்கான போட்டி தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக ஆயத்த பயிற்சி அளித்திடும் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை/இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் நேரில் விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர் மீன்துறை இணைய தளத்தில் உள்ள விரிவான அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் அரியலூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், அறை எண். 234, 2-வது மேல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர் -621 704. என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 05.11.2024 பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம், SKC காம்ப்ளக்ஸ், பெரம்பலூர். என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.