Perambalur: Prime Minister’s School Higher Education Scholarship for BC, MBC, DNT students; Collector’s information!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட (மி.பி.வ), சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ / மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை PM-YASASVI-Post Matric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மாணவ / மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு , மாணவ / மாணவியர்களுக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வறவேற்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித்தொகைக்காக உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி, https://umis.tn.gov.in/ என்ற இணைதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல். விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 31-12-2025 ஆகும்.

மேலும், கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் நேரிலோ அல்லது 04328-296565 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என கலெக்டர் மிருணாளினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!