Perambalur: Priority should be given to the demands of the people; Collector Grace pachuau talks!
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து சம்மந்தப்ட்ட துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, , மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மாவட்ட தொழில்மையம், நகராட்சி, பேரூராட்சிகள் துறை, ஊரக வளர்ச்சி முகமை, தாட்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம், கனிமவளத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்தும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விரிவாக கேட்டறிந்தார்.
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசிடமிருந்து பெறப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் எவ்வளவு, இதுவரை எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது, தற்போது நடைபெற்றுவரும் திட்டங்கள், பணிகள் என்னென்ன, முடிக்கப்பட்டுள்ளது என்று விரிவாக ஆய்வு செய்த கலெக்டர், பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்றுவரும் கட்டுமானப் பணிகளை குறித்த காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மக்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவதே அரசுத்துறை அலுவலர்களின் கடமையாக இருக்க வேண்டும். எனவே, பொதுமக்களிடமிருந்து வரும் கோரிக்கை மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் தீர்வு காணக்கூடிய கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மனுவையும் முறையாக விசாரித்து நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் அனைத்துத்துறைகளின் மாவட்ட நிலையிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்