Perambalur: Prisoner escapes from police custody after going to jail; escapes again from police who chased him and caught him!

Thanks and Photo Credit to vecteezy.com. Photo For Model

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள ஓலைப்பாடியை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வாஞ்சிநாதன் (34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு பதின்ம வயது சிறுமி ஒருவரை கன்னத்தில் கடித்து வைத்ததால், அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து பெரம்பலு{ர் கிளை சிறையில் சிறைக்காவலில் வைத்து இருந்தனர். இன்று காவல் நீட்டிப்புக்காக போலீசார் பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் ஜெயிலுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது பழைய பேருந்து நிலையம் பகுதியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓடினான். தப்பிய வாஞ்சிநாதனை போலீசார் அதிதீவிரமான தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது செஞ்சேரி சிக்கிய வாஞ்சிநாதன், பிடித்த போலீசாரின் கையை தட்டி விட்டு தப்பி தலைமறைவானன். உடனடியாக மற்ற போலீஸ் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஆலம்பாடி, செஞ்சேரி, சொக்கநாதபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது சல்லடை போட்டு தீவிரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தேடி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், விடிவதற்குள் தப்பி ஓடிய கைதியை போலீசார் பிடித்து விடுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!