Perambalur: Private medical college professors who drove erratically under the influence of drugs! Imprisonment due to collision with vehicles!
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் (TN46AE5458 SELTOS) தாறுமாறாக ஓடியது. இதில் கடை மற்றும் வணிவளாகங்கள முன்பு நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்கள் மீது உரசியடி சென்றது. இந்த சம்பவத்தில் ஸ்கூட்டர் ஒன்றின் மீது, மோதி முன்பகுதி பலத்த சேதமடைந்தது. உடயனடியாக அக்கம்பக்கத்தினர் ஒன்று திரண்ட போது, காரில் வந்தவர்களை விசாரித்த அவர்கள் நல்ல போதையில் இருப்பதும், அவர்கள் இருவரும் சிறுவாச்சூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணி செய்வதும் தெரியவந்தது.
கார் மோதியதில் ஸ்கூட்டர் சேதமடைந்ததால், ஸ்கூட்டரில் வந்தவர்கள் காரை ஓட்டியவரை பிடித்து, பாலக்கரையில் உள்ள பைக் கம்பனிக்கு அழைத்து சென்று ஸ்கூட்டரை சரி செய்து கொடுத்து விட்டு செல்ல சிறைப்பிடித்தனர். அந்த மருத்துவ பேராசிரியரோ நான் யார் தெரியுமா? நான் பெரிய குரூப் என வீரவசனம் விட்டுக் கொண்டிருந்தார். ஸ்கூட்டர் இளைஞர்கள் அந்த குரூப் எங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம் என பதிலுக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில் காரில் வந்த மற்றொரு மருத்துவ பேராசிரியரான அரவிந்த என்பவரை வெங்கடேசபுரத்தில் இருந்த ஒரு ஏஜன்சியை சேர்ந்த ஊழியர்கள் மற்றொரு டிரைவர் உதவியுடன் காரின் பின்சீட்டில் அமர வைத்து துறைமங்கலத்தில் உள்ள வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நல்வாய்ப்பாக குடிபோதையில் மருத்துவர்கள் காரை ஓட்டியதால் பரபரப்பான சாலையில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வாகன ஓட்டிகள் ஆறுதல் அடைந்தனர்.
போதை படிக்காத பாமரர்களை மட்டுமல்ல மெத்த படித்த டாக்டர்களை கூட விதிவிலக்கல்ல என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம். போக்குவரத்து போலீசார் காரில் குடித்துவிட்டு செல்பவர்களுக்கும் பாரபட்சமின்றி அபாராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.