Perambalur: Private sector placement camp with 120 companies participating; Collector Info!

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகமும் இணைந்து, அக்.19 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளது.

இதில், பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள MRF உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் சென்னை காஞ்சிபுரம், ஓசூர், கோயமுத்தூர், திருப்பூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள 120-க்கும் மேற்பட்ட முன்னனி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான பணி வாய்ப்புகள் வழங்க உள்ளார்கள். ஓட்டுநர், தையல், 5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்ஸிங், பார்மஸி, பி.இ., பி.டெக், ஹோட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித்தகுதியுடையவர்களை தேர்வு செய்யவுள்ளனர். 
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பதிவு செய்யப்படும். சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுய தொழில் உருவாக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறும். தேசிய மற்றும் தமிழ்நாடுஅளவிலான தனியார் வேலை இணையதள சேர்க்கை முகாம் நடைபெறும்.

கல்வித் தகுதிக்கேற்ப குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 10,000 ஆயிரம் முதல் ரூ.25,000 ஆயிரம் வரை வழங்கும் வகையிலா பணிவாய்ப்புகள் இருக்கும்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் வழங்கப்படும் இலவச பயிற்சி வாய்ப்புகளுக்கு சேர்க்கை முகாம் நடைபெறும். மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் (OMCL) பதிவு வழிகாட்டுதல்கள், TNPSC, TNUSRB-Police, TRB,TET போன்ற அரசு பணி போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.

வேலைநாடுநர்கள் தங்களது ஆதார் எண், சுயவிபரம் (பயோடேட்டா) மற்றும் கல்விச்சான்றுகளுடன் 19.10.2024 சனிக்கிழமை காலை 08.00 முதல் மாலை 3.00 மணி வரை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

            இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விபரங்களை பதிவு செய்து கொள்ளலாம், இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம். இவ்வேலைவாய்ப்பு முகாம் பணிவாய்ப்பு பெறும் வேலைநாடுநர்களின் பதிவுமூப்பு இரத்து செய்யப்படமாட்டாது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இடத்திற்கு செல்வதற்காக பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விபரங்களுக்கு  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 9499055913 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!