Perambalur: Protest by the Lawyers’ Social Justice Council condemning the Tamil Nadu Chief Minister!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களின் சந்திப்பில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை இழிவாக பேசியதாக கூறி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள், சமூக நீதிப் பேரவை சார்பில் வழக்கறிஞர்களும் சமூக நீதிப் பேரவை மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் கண்டன போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், ஆர்ப்பாட்டம் செய்த வழக்கறிஞர்களை குண்டு கட்டாக தூக்கி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் பகுதியில் சிறிய நேரம் பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது. இதில் வழக்கறிஞர்கள் தங்கதுரை, சத்தியசீலன், அன்பு, இளங்கோவன், குரு முருகன் , சக்திவேல், ஏகாம்பரம், ராஜராஜன், இளவல், ராஜசேகர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு, பாமக நிறுவனரை அவதூறாக பேசிய தமிழக முதலமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மன்னிப்பு கேட்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.