Perambalur: Public argues with officials over construction of retaining wall to prevent accidents!
பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், செங்குணம் கைகாட்டி என்ற இடத்தில், தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க அப்பகுதியில் இணைப்பு சாலை விரிவாக்கம் செய்யும் பணி முடிவடைந்த நிலையில், இருசக்கர வாகனம் மட்டுமே சென்று வரும் வகையில் சாலையின் நடுவே சென்டர் மீடியனின் உள்ள பிரிவில் தற்காலிகமாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தடுப்புகளை இருசக்கர வாகனங்கள் கடந்து செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் தற்காலிக தடுப்புகளை
அகற்றி விட்டு, நிரந்தரமாக (சென்டர் மீடியன்) தடுப்பு சுவர் அமைப்பதற்கு போக்குவரத்து போலீசார் உதவியுடன் சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு இந்த சாலை பிரிவை கடந்து சென்று வர வேண்டும் என்றால் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று வர வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பால் சாலையின் நடுவே நிரந்தரமாக தடுப்புகளை அமைப்பதை கைவிட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் அந்த பகுதியில் 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் போக்குவரத்திற்கு வழிவகை செய்தனர். விபத்துகளை தடுக்க சாலையின் நடுவே தடுப்புகளை அமைக்க சென்ற சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிட்ட பெரம்பலூர் போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.