Perambalur: Public demands demolition and disposal of damaged water tank on Keelakarai before a major disaster occurs!
பெரம்பலூர் மாவட்டம், எசனை அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. அதன் தூண்கள் தற்போது நாளுக்கு நாள் அதிகமாக சேதமடைந்து வருகிறது. அதனுடைய 4 தூண்களில் கம்பிகள் துருப்பிடித்து விரிசல் விட்டு பலமிழந்து காணப்படுகிறது. தலைப்பாரத்தால் அந்த தொட்டி சரிந்து விழலாம். இது குறித்து பொதுமக்கள் பல முறை அதிகாரிகளுக்கும், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பல முறை தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எசனை – கீழக்கரை இரு ஊர்களும் இணைந்த கடைவீதி பகுதியாகவும், அருகிலேயே குடியிருப்புகள், கோயில், கடைகள், பொதுக்கிணறு ஒன்றும் உள்ளது. மேலும், விவசாயிகள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள் அதிக அளவில் அப்பகுதியில் வந்து செல்வதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.