Perambalur: Public demands police SP to confiscate Pullingo bikes that are driving recklessly without number plates and making people scream with the sound of silencers!

பெரம்பலூர் மாவட்ட சாலைகளில் வாலிபர்கள் பொதுமக்களை கவரவும், கவுரமாகவும் நினைத்தும் சேட்டைகள் செய்யும் விதமாக அரசின் விதிமுறைகளை மீறி பைக்குகளை வடிவமைப்பதோடு மட்டும் அல்லாமல், அதிவேகமாகவும், அதிக சத்தத்தை எழுப்பும் வகையிலாக சைலன்சர்களை பொருத்தியும், சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக வீலிங் செய்கின்றனர். வாகனங்களின் டயர்களில் உரசுவது போன்று முந்திச் செல்வதால் வாகனங்களில் செல்லும், பெண்கள், முதியவர்கள், குடும்பத்துடன் செல்பவர்கள் பெரும் சிரமம் அடைக்கின்றனர். பலர் பைக்கை போட்டு விழுந்தும் விடுகின்றனர்.

சில புள்ளிங்கோ பைக் வைத்திருக்கும் இளைஞர்கள் மற்ற வாகனங்களில் மோதினாலும், திரும்பி கூட பார்க்கமல் அதிவேகமாக சென்று மறைந்து விடுகின்றனர். அவர்களை அடையாளம் காண வண்டியின் நெம்பர் பிளேட்டுகளை பார்த்தால் அதுவும், முன் மற்றும் பின் பகுதியில் இருப்பதில்லை.

அவர்களின் பைக்குகளை போக்குவரத்து போலீசார் கூட விரட்டி சென்றால் பிடிக்க முடியாது. அந்த அவர்களின் பைக்குகள் சாலையில் சீறிப் பாய்கின்றன. எனவே, பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி., இப்பபிரச்சனையில் தலையிட்டு, அவர்களை பிடிப்பதோடு மட்டுமில்லாமல், போக்குவரத்து விதிகளை வாகனங்களை பறிமுதல் செய்து ரோலர் விட்டு நொறுக்கி, இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!