Perambalur: Public relations program camp led by collector in Elumur village!
பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் லால் ரிண்டகி பச்சாவ் தலைமையில், குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட எழுமூர் (கிழக்கு) கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் 14.08.2024 (புதன்கிழமை) அன்று நடைபெறுகிறது. அதற்காக, பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
எனவே, எழுமூர் (கிழக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எழுமூர் (கிழக்கு) கிராம நிருவாக அலுவலகத்தில், கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு கலெக்டர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.