Perambalur: Public suffers due to lack of doctors at Arumbavur Primary Health Center!
பெரம்பலூர் மாவட்டம், அரும்பாவூர் பேரூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அரும்பாவூர், தழுதாழை, தொண்டமாந்துறை, அ.மேட்டூர், விஜயபுரம், கோரையாறு, பூமிதானம், கவுண்டர்பாளையம், வெட்டுவால் மேடு, மலையாளப்பட்டி, புதூர், கொட்டாரக்குன்று உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற தினமும் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் நோயாளிகளின் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லாமல், ஒரே ஒரு மருத்துவர் மட்டும் இருப்பதால், நோயாளிகள், பெண்கள், குழந்கைள், மாணவர்கள், தொழிலாளர்கள், முதியவர்கள் உரிய நேரத்திற்கு வீடுகளுக்கு திரும்ப முடிவதில்லை. மேலும் பலர் பஸ்சை தவறவிட்டு பெரும் சிரமமப்படுகின்றனர். மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியாக இருக்கும் அரும்பாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நோயாளிக்கு ஏற்ப கூடுதலாக டாக்டர்களை நியமிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.