Perambalur: Puratasi 1st Saturday: Special Pujas at Sri Madanagopala Swamy Temple!
பெரம்பலூர் ஸ்ரீமரகதவள்ளி தாயார் உடனுறை ஸ்ரீ மதனகோபால சுவாமி திருக்கோவிலில் இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு இன்று காலை 10.30 மணி அளவில் பூதேவி சமேத ஸ்ரீதேவி உடன் பெருமாள் மூலவர், உற்சவர், ஸ்ரீமரகதவல்லிதாயார் மூலவர் உற்சவர், மற்றும் ராஜகோபுரம் முன் எழுந்தருளி அருள் பாலிக்கும் கம்பத்து ஸ்ரீஆஞ்சநேயருக்கும் பால், தயிர், சந்தனம், இளநீர், பழ வகைகளுடன் சிறப்பு திருமஞ்சனம் (அபிஷேகம்) முடித்து நண்பகல் 1 மணியளவில் மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரவு 7: 00 மணி அளவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரமும் வடமாலையும்,சாற்றி சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. பூஜைகளை பட்டாபி பட்டாச்சாரியார் செய்து வைத்தார். ராஜமாணிக்கம் மற்றும் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பெருமாள் பக்தர்கள் கலந்து கொண்டு சேவை சாதித்தனர். விழா உபயதாரர் மா. பழனியாண்டி பிள்ளை & சன்ஸ் ராஜா ஸ்டோர் உரிமையாளர்கள் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடு செயல் அலுவலர் கோவிந்தராஜன் செய்து இருந்தார்.