Perambalur: Quarry, Crusher and Lorry Owners Association announces strike demanding government to drop tonnage tax and resume old policy!
பெரம்பலூர் மாவட்ட, கல்குவாரி, கிரசர், லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டம், துறையூர் சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்தில் தலைவர் நந்தக்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் சத்தியராஜ், கவுரவத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த எசனை, வெங்கலம், தொண்டைமான்துறை, எளம்பலூர், செங்குணம், கவுள்பாளையம், கல்பாடி எறையூர், பாடாலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குவாரிகளின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில், டன் அடிப்படையில் அரசாங்கம் எந்த வரியையும் விதிக்கக்கூடாது. அரசாங்கம் பழைய கன மீட்டர் முறையைப் பின்பற்ற வேண்டும். அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் நேரடியாக கன மீட்டர் முறையில் மட்டுமே செய்ய முடியும். டன்னேஜ் முறை தன்னிச்சையானது, எடை இடத்திற்கு இடம் மாறுபடும், கணக்கீடு எளிதானது அல்ல மற்றும் முரண்பாடானது.
சீக்னியோரேஜ் மற்றும் நிலம் தாங்கும் கனிம வரியின்படி, அரசாங்க உத்தரவுகள் படி 1 கன மீட்டர் 1.5 மெட்ரிக் டன் என்பது நியாயமானது மற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியது. ஆனால், ஒரு யூனிட் என்பது 1.5 × 2.83 வீதத்தில் 4.25 டன் ஆகும். ஆனால், கன மீட்டர்- அடர்த்தியின் அடிப்படையில் டன்னேஜ் மாற்றும் முறையின்படி, 1 கன மீட்டர் = 2.75 மெட்ரிக் டன். 1 யூனிட் = 2.75 × 2.83 = 7.8 டன்னா கணக்கிடப்படுகிறது. இந்த டன்னேஜ் மாற்றும் முறைதான் தற்போதைய அனைத்து பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.
இது அரசாணைக்கு முரணானது. ஒட்டுமொத்த கல் நொறுக்கும் தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த சர்ச்சைக்குரிய டன் அளவிலான சுரங்க மாற்ற முறையைத் தொடர்வது அறியப்படாத பல கடுமையான சிக்கல்களுக்கும், கல் நொறுக்கும் தொழிலுக்கு மூடலுக்கும் வழிவகுக்கும் என்றும், எனவே தொழிலைக் காப்பாற்ற கன மீட்டர் முறைக்குத் திரும்ப வேண்டும் என்றும்,
கர்நாடக மாநிலத்தைப் போலவே, புதிய நிலம் தாங்கும் கனிம வரியிலிருந்து பாறைகளுக்கு (சிறு கனிமங்கள்) விலக்கு அளிக்கப்பட வேண்டும். என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதோடு, லோடு ஒன்றுக்கு ரூ. 3800 கூடுதலாக வரியாக அரசுக்கு செலுத்தும் நிலை உள்ளது என்றும், இந்த வரியும் கல் மற்றும் எம்.சாண்ட், உள்ளிட்டவைகளை வாங்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, முடங்சி வரும், கட்டுமானத் தொழில், அதனை சார்ச்த தொழிலாளர்கள், பில்டர்கள் கடுமையாக பாதிப்படுவார்கள். அதனை அரசு சீர்திருத்தம் செய்து தரக்கோரி வரும் 16ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொருளாளர் ரவி நன்றி கூறினார்.