Perambalur: Rainwater harvesting; The collector flagged off the awareness campaign vehicle.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், TWAD சார்பில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் வாயிலாக மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட TWAD மூலமாக தயாரிக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குறித்த குறும்படத்தை பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பொதுமக்கள் காணும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாகனத்தையும், கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை பராமரிக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
முன்னதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக ஊராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் தரப் பரிசோதனை பெட்டகத்தின் மூலமாக குடிநீரின் தரம் அறிந்து கொள்வதற்கான செயல்முறை விளக்க விழிப்புணர்வு நடத்தப்பட்டதை கலெக்டர் பார்வையிட்டார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள், பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.