Perambalur: Randomized selection of staff working at the counting center!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கான இணைய வழியில் கணினி முறை குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான க.கற்பகம் தலைமையில் நடந்தது.
25. பெரம்பலூர் பாராளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமான ஆதவ் பப்ளிக் பள்ளியில் வரும் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணிக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 மேசைகள் பயன்படுத்தப்படவுள்ளது.
வாக்கு எண்ணும் பணிக்கு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் மேற்பார்வையாளர்கள் (Counting Supervisors) தலா 17 நபர்களும், உதவி அலுவலர்கள் (Counting Assistants) தலா 17 நபர்களும் மற்றும் நுண்பார்வையாளர்கள் (Micro Observers) தலா 17 நபர்களும் என மொத்தம் 306 நபர்கள் நியமனம் செய்ய முதற்கட்டமாக கணினி (1st Randomization) மூலம் மூன்று வகையருக்கான பணி ஒதுக்கீடு செயவதற்காக குலுக்கல் நடந்தது.
இந்நிகழ்வில், தேர்தல் மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.