Perambalur: Resolution passed at the meeting of the Tamil Nadu Farmers’ Movement to provide compensation for crops damaged by the storm!
கூட்டத்தில், 21.12.24அன்று திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் உழவர் பேர் இயக்க மாநாட்டிற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 5000 விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து அரசு நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் மழை நீரில் பாதிக்கா வண்ணம். கிடங்குகள் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்றும்,
தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நெல்,பருத்தி,மக்காசோளம் விவசாயிகளுக்கு உடனடியாக தகுந்த இழப்பீடுகள் தமிழக அரசு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு மாட்டுக் கொட்டகை இலவசமாக கட்டி கொடுக்க வேண்டும், குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை பகுதியில் விவசாயிகளில் நலம் கருதி முந்திரிப் பகுதிகளுக்கு இன்சூரன்ஸ் செலுத்தும் திட்டத்திற்கான கால கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும்,
செந்துறை பகுதியில் விருத்தாசலம் அரசு வனத்தோட்ட கழகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த முந்தரி மர பயிர்களை அழித்துவிட்டு, அதற்கு பதிலாக தைலமரக்கன்றுகள் நடும் முயற்சியை கைவிட்டு விட்டு 100 ஆண்டுகளாக செந்துறை பகுதியில் நடைமுறையில் இருக்கும் முந்திரி பயிர்களை மீண்டும் நடவு செய்து பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருவதால் சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கு விவசாயிகளை கண்டறிந்து உடனடியாக உரிய நிவாரணம் வழங்க என்றும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ப்பட்டது.அ.மேட்டூர் ரமேஷ் உள்பட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். நகர செயலாளர் இமயவர்மன் நன்றி தெரிவித்தார்.