Perambalur: Road blockade demanding 100 days of work provided by the central government!
பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு 100 நாட்கள் வழங்கப்படும் பணியை 100 நாட்கள் வழங்கக் கோரி கிராம மக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நாரணமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் கிராம மக்களுக்கு ஆண்டுக்கு 50 அல்லது 60 நாட்களே வேலை வழங்கப்படுவதாக கூறி அக்கிராம மக்கள் அரசு அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த இக்கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை நாரணமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பாடாலூர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில், பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், இன்று காலை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.