Perambalur: Road blockade protesting worship to Sami!
பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் அடுத்த களரம்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் ஒன்றுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. அதில் குறிப்பிட்ட சமூகத்தினர் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட அனுமதிப்பதாகவும் அந்த அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இன்று அந்த கோவிலில் மறு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் ஒரு தரப்பினர் சாமியை தரிசனம் செய்து, தேங்காய், பூ, பழம் படைக்க சென்ற போது அங்கிருந்த மற்ற சமூகத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ஒரு தரப்பினர் இன்று மதியம் பெரம்பலூர் – துறையூர் சாலையில் அவ்வழியாக வந்த வாகனங்களை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமசரச பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
மேலும், அந்த கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்தை போலீசார் சீர்செய்தனர்.