Perambalur: Robber got caught in wire fence while trying to escape by snatching cell phone from people sleeping in car!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள இருவர் காரில் நேற்று திருச்சி மாவட்டம் துவாக்குடி சென்று திரும்பி கொண்டிருந்தனர். கார், திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கை.களத்தூரை நோக்கி வந்து கொண்டிருந்த போது, தூக்கம் வந்ததால், விஜயகோபாலபுரம் அருகே காரை நிறுத்தி ஏ.சியை போட்டு கொண்டு கார் கண்ணாடியை ஏற்றி விட்டு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த இருவர் காரில் தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பி தண்ணீர் கேட்டு உள்ளனர்.
காரின் கதவை திறந்த உடன் கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி உள்ளனர். அதில், சுதாகரித்த ஒருவர் கொள்ளையர்களின் கத்தியை தடுத்து திமிரி எழுத்தனர். உடனே, கத்தியால் கொள்ளையன் ஒருவன் அவரின் கையால் வெட்டினான். அவர் அலறி துடித்து கொண்டிருந்த போது, அவரிடம் இருந்த செல்போனை பறித்த கொள்ளையன் தப்பி ஓடினான். அப்போது, சாலைஓரம் இருந்த கம்பி வேலியில் சிக்கி கொள்ளையனுக்கு உதடு கிழிந்து, முகத்தில் காயம் ஏற்பட்டது.
கொள்ளையர்கள் இருவரும் பைக்கில் தப்பி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, கிழே விழுந்து விட்டதாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். காரில் வந்தவர்களும், பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தனர். மருத்துவமனை ஊழியர்கள் விசாரித்த போது, விஜயகோபாலபுரம் அருகே விழுந்து விட்டதாக இப்போது தானே சிகிச்சை எடுத்தனர். அதற்குள்ளவா? என விசாரித்த போது மருத்துவமனையில் கொள்ளையர்கள் இருந்ததை கண்டு, காரில் வந்தவர்கள் இவர்கள் கையை வெட்டியவர்கள், கொள்ளையர்கள் என கத்தினர். உடனடியாக அங்கிருந்தவர் மடக்கிப்பிடித்து போலீசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள் இருவரும் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சேர்ந்தவர்கள் என்றும், போதை ஏறிவிட்டால், திருமாந்துறை டோலில் இருந்து சமயபுரம் டோல் வரை சென்று அபகரித்து வருவதை வழக்காக வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இச்சம்பவம் , திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளிடையே பேரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், வாகனங்களில் ஓய்வு எடுப்பவர்கள் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிலோ, சுங்கச் சாவடி அலுவகத்தின் அருகிலோ அல்லது பாதுகாப்பான ஹோட்டல்கள் உள்ள இடங்களில் ஓய்வு எடுப்பது நல்லது. வண்டி பழுதானால், பெண்களை அழைத்து செல்பவர்கள் தனியாக வாகனத்தின் அருகே விட்டுச் செல்லமல் இருப்பது நல்லது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சராகி நின்ற காருக்கு உதவுவது போல், காரில் வந்த பெண்ணிடம் நகை பறித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நெடுந்தூரம் பயணிப்பவர்கள், காரை பரிசோதித்து செல்வது நல்லது.