Perambalur: Robbery at a temple in heavy rain! Police investigating!
பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தில் தெருவில் மதுரை வீரன், கருமாரியம்மன் கோவில்கள் உள்ளது. பூசாரி சேகர் நேற்று இரவு 10 மணிக்கு கதவை பூட்டி விட்டு இன்று காலை 7 மணி அளவில் திரும்ப வந்து பார்த்தபொழுது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது
அம்மன் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தாலி, உண்டியலில் பணம் ரூ.25 ஆயிரம் பணமும் திருடு போயிருந்தது தெரியவந்தது. பின்னர் இது குறித்து, கோவில் தர்மகர்த்தாக்கள் ராஜேந்திரன், அப்பாவு, கலாமணி மற்றும்
பூசாரி சேகர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விடாது பெய்த அடை மழையிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.