Perambalur Rover Engineering College in the regional championship started today

kabadi-perambalur-news

19 வயதிற்கு உட்பட்டோருக்கான மத்திய மண்டல அளவிலான கபடி போட்டி பெரம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.

பெரம்பலூரில் உள்ள தனியார் ( ரோவர்) பொறியியல் கல்லூரியில் 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ரோவர் சுழற்க் கோப்பைக்கான ஆடவர் கபடி போட்டி மத்திய மண்டல அளவில், இன்றும், நாளையும் நடைபெறுகிறது.

பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கபடி அணியினர் இன்று கலந்து கொண்டனர்.

இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, நாளை பரிசுகள் மற்றும் கோப்பைகளை வள்ளலார் ஜெ.அரவிந்தன் வழங்க உள்ளார். முன்னதாக, பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆய்வாளர் டி. விஜயன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

ரோவர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், முதல்வர் கணேஷ்பாபு, அல்லிராணி, பேராசிரியர்கள், சுபாராஜ், பெரியசாமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். உடற்கல்வி இயக்குனர்கள், புகழேந்தி, கண்ணன், வெற்றிவேல், அறிவழகன் ஆகியோர் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு. தங்குமிடம், உணவு, தேனீர், மற்றும் சிற்றுண்டிகள் கல்லூரி நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!