Perambalur: Rs. 2.09 crores and laid the foundation stone for the new works and inaugurated the completed works by Transport Minister Sivasankar.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்தில், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் ரூ.2.09 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.

         பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேள்விமங்கலம் கிராமத்தில் முதலமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.94.66 லட்சம் மதிப்பீட்டில் அம்மாக்குளம் முதல் ஆற்றுப்பாதை வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், ஒகளூர் கிராமத்தில் ரூ.36.55 லட்சம் மதிப்பீட்டில் ஒகளூர் முதல் மோரன்குளம் வரை தார் சாலை அமைக்கும் பணியினையும், 

மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் அத்தியூர் கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.8.33 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் மேற்கு பகுதியில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினையும், ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் மேற்கு பகுதியில் சிறு பாலம் மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியினையும்,

            நன்னை கிராமத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.29.97 லட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும், நன்னை ஊராட்சிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் ரூ.18.42 லட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினையும் என பல்வேறு பகுதிகளில் மொத்தம் ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் 07  புதிய பணிகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அத்தியூர் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் ரூ.7.10 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் காத்திருப்போர் கூடத்தினையும், ஒன்றிய பொது நிதியின் கீழ் ஒகளூர் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒகளுர் நாடக அரங்க மேடையினையும், குன்னம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் நன்னை ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்ட மின் விசை பம்புடன் கூடிய குடிநீர் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மேலும், ஒகளூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 48 மாணவர்களுக்கு ரூ.2,35,200 மதிப்பீட்டிலும் மற்றும் 23 மாணவிகளுக்கு ரூ.1,09,480 மதிப்பீட்டிலும், மற்றும் ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 84 மாணவர்களுக்கு ரூ.4,11,600 மதிப்பீட்டிலும், 56 மாணவிகளுக்கு ரூ.2,66,560 மதிப்பீட்டிலும் என மொத்தம் 211 மாணவ,மாணவிகளுக்கு ரூ.10,22,840 மதிப்பீட்டிலான அரசின் இலவச மிதிவண்டிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

        மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளைள உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்,  திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினார் பட்டுச்செல்வி ராஜேந்திரன், அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!