Perambalur: Rs 28.66 Crore Bank Loan for Self Help Groups: Minister Sivashankar Granted!
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 265 சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 4,655 உறுப்பினர்களுக்கு, ரூ.28.66 கோடி மதிப்பிலான வங்கி கடன் இணைப்புகளையும், வருவாய்த்துறை சார்பில் மலையாளப்பட்டி மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் பூமிதான நிலத்தில் வாழும் மக்களின் சுமார் 40 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் 50 பயனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 60 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளையும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் வழங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந்திரன், யூனியன் சேர்மன்கள் ந.கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்),மீனா அண்ணாதுரை (பெரம்பலூர்), க.ராமலிங்கம் (வேப்பந்தட்டை), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவர் ஜாஹிர் உசேன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.