Perambalur: Rs 5.99 lakh worth of assistive devices for differently abled: Collector provided!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் யூனியன் ஆபீசில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் செயற்கை அவையம் வழங்கும் நிறுவனம் (ALIMCO) நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,000 மதிப்பிலான மின்கலத்தினாலான 3 சக்கர சைக்கிள், ரூ.10,000 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், ரூ7,900 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலி, செயற்கை கை, கால்கள் உள்ளிட்ட 27 வகையான , ரூ.5.99 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை 95 மாற்றுத்திறனாளிகளுக்கு கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
ஆலத்தூர் பிடிஓ சேகர், ALIMCO நிறுவனத்தின் தொழில் நுட்ப வல்லுநர் செல்வி.சுமையா, இருர் ஊராட்சித் தலைவர் காந்திமதி உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.