Perambalur: Ruling party MLA’s university lecturer leaves 3-year-old child stranded, disappears?! Police investigating!

பெரம்பலூரில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவருக்கு சொந்தனமான தனியார் யுனிவர்சிட்டி இயங்கி வருகிறது. அங்கு, பெரம்பலூர் துறைமங்கலம், நியூ காலனியை சேர்ந்த திருமணமான, 3 வயது குழந்தை உள்ள 27 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு யுனிவர்சிட்டியில் விரிவுரையாளர் வேலைக்கு சேர்ந்தார். கடந்த 24 ம் தேதி யுனிவர்சிட்டிக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்றும், பல இடங்களில் தேடியும் விசாரித்தும் அந்த இளம் விரிரையாளர் எந்த தகவலும் கிடைக்காத காரணத்தால், அவரது கணவர் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அதே யுனிவர்சிட்டியில் 3ம் ஆண்டு படித்து வரும் பெரம்பலூர், எளம்பலூர் சாலையில் உள்ள சர்க்கார் கேணி பகுதியில் வசிக்கும் 20 வயது மாணவனுடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்துள்ளது. மாணவனும் தற்போது ஊரில் இல்லாத நிலையில் சந்தேகப்பட்ட போலீசார் தனிப்டை அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கி உள்ளனர். யுனிவர்சிட்டி விரிவுரையாளர் மாயமாகி விட்டாரா அல்லது யாராவது கடத்தி சென்றுவிட்டார்களா, அல்லது மாணவனுடன் காதல் வயப்பட்டு உல்லாச பறவைகளாக தலைமறைவாகி விட்டார்களா, என பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யுனிவர்சிட்டி முன்பு, கஞ்சா விற்ற சம்பவம், அடங்கிய நிலையில், கள்ளக்காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதால், மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், குருவாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களுடன், மாணவர்களுக்கு ஏற்படும் காதல் சம்பவங்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.

அதே யுனிவர்சிட்டியில், பெண் வார்டன் ஒருவர் காதல் விவகாரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல அரசுப் பள்ளி ஆசிரியை தீபாவை சக ஆசிரியர் வெங்கேடசன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.  15 வயது மாணவனுடன் நெல்லை அருகே டீச்சர் காதல் வயப்பட்டு ஓடிய சம்பவங்களை குறிப்பிடலாம்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!