Perambalur: Rural Development Department Officers’ Union Contingency Leave Protest!
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் 20 அம்ச கோரிக்கையான வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் உள்ளிட்ட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டியும், வளர்ச்சித் துறை ஊழியர் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலுமாக கைவிட வேண்டியும்,
ஊராட்சி செயலர்களுக்கு சிறப்பு நிலை தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடு பட்ட உரிமைகளை வழங்க கோரியும், உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்கு நிரந்தர ஊழியர் கட்டமைப்பு வசதிகளை மாநில, மாவட்ட, வட் டார அளவில் ஏற்படுத்த வேண்டும்,
பணியிடை காலத்தில் இறந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களை பாதுகாத்திட கருணை அடிப்படையில் பணி நியமனங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு தனி அலுவலர்கள்
அமைப்பு ஏற்படுத்த வேண்டும், கலைஞர் கனவு இல்லம் ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு உரிய பணியிடங்கள ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர தமிழக அரசை வலியுறுத்தி இரண்டு தினங்களுக்கு ஒட்டு மொத்த ஊழியர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஊராட் ஒன்றிய அலுவலகங்களில் நேற்றும், இன்றும் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இரண்டு தினம் தற்செயல் விடுப்பு போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.