Perambalur Rural Police Station: Inaugurated by Police SP Adarsh Pasera in Senjeri village!
பெரம்பலூர் நகர காவல்நிலையம் செயல்பட்டு வரும் நிலையில் நிர்வாக காரணங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாள்வதற்காக பெரம்பலூர் நகர காவல் நிலையத்திற்குட்பட்ட சுமார் 33 கிராமங்களை உள்ளடக்கி பெரம்பலூர் ஊரக காவல்நிலையத்தை போலீஸ் ஆதர்ஷ் பசேரா திறந்து வைத்தார்.
அப்போது அவர் தெரிவித்தாவது: புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஊரக காவல்நிலையத்தினால் பெரம்பலூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களின் பிரச்சனைகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவற்றை கையாள்வதும் அதற்கு தீர்வுகாண்பதும் இனிவரும் காலங்களில் சற்று எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராம மக்கள் நேரடியாக ஊரக காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்றும் கூறினார்.
எசனை, கீழக்கரை, ஆலம்பாடி, புது நடுவலூர், வேலூர், சத்திரமனை, குரும்பலூர், மேலப்புலியூர், லாடபுரம், அம்மாபாளையம், களரம்பட்டி, நக்கசேலம், பொம்மனப்பாடி, பாப்பங்கரை, செஞ்சேரி, சொக்கநாதபுரம், மேட்டூர் ,
பழைய சாத்தனூர், வெள்ளனூர், தம்பிரான் பட்டி, ரங்கநாதபுரம், கீழக்கனவாய், மேட்டாங்காடு, பாளையம், கே.புதூர், ஈச்சம்பட்டி, மேலக்காடு, நாவலூர், திருப்பெயர், புதுஆத்தூர், சரவணபுரம், அடைக்கம்பட்டி, மங்கூன் ஆகிய பகுதிகள் பெரம்பலூர் ஊரக காவல் நிலைய எல்லைக்கு உட்டபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.