Perambalur: Scholarship for Tamil Nadu students studying in IIT, IIM, IIIT, NIT Central Universities; Collector Information!
இக்கல்வி உதவித் தொகைக்கு 2024-25ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renwal Applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், சென்னை-5/மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarships_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், 2024-25ம் நிதியாண்டிற்கான புதியது (Fresh) மற்றும் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை விண்ணப்பித்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பித்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-05 (தொலைபேசி எண்.044-29515942, மின்னஞ்சல் முகவரி. tngovtiitscholarship@gmail.com) என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2024-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025-க்குள் அனுப்பி வைக்கவேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.